தமிழ்நாட்டுத் திருக்கோயில்கள் எல்லாம் பராமரிக்க முடியாமல், பாழடைஞ்சி போயிக்கிடக்கு. ஒவ்வொரு கோயிலுக்கும் போயி அவற்றின் ஷரித்திரங்களை எல்லாம் எழுதணும்.
Google reader, நான் படிக்கும் தமிழ் வலைப்பதிவுகள்
அவ்வப்போது சில நல்ல தமிழ் வலைப்பதிவுகளை கவனிக்கும்போது அவற்றை என் கூகுள் ரீடரில் சேர்த்து வைத்துக் கொள்கிறேன். இதனால், விருப்பமான வலைப்பதிவுகளை எவ்வளவு நாள் சென்றாலும் தவற விடாமல் படிக்கலாம். ஒவ்வொரு தளமாகச் சென்று பார்க்காமல் அனைத்தையும் ஒரே இடத்தில் இருந்து இலகுவாகவும் வேகமாகவும் படிக்கலாம்.
இப்படி சேர்த்து வைத்திருக்கும் பதிவுகள் எண்ணிக்கை 150ஐத் தாண்டுகிறது. யாருக்காவது இந்தப் பட்டியலைப் பெற்றுக் கொள்ள விருப்பமானால் ravidreams_03 at yahoo dot com க்கு எழுதுங்கள். இந்தப் பட்டியல் அடங்கிய OPML கோப்பை உங்களுடன் பகிர்ந்து கொள்ள மகிழ்வேன். இப்பட்டியலை உங்கள் ரீடரில் சேர்த்துக் கொண்ட பிறகு, உங்களுக்கு விருப்பம் இல்லாத பதிவுகளை இலகுவாக நீக்கிக் கொள்ளலாம். மேலும், நீங்கள் விரும்பும் பதிவுகளையும் சேர்த்துக் கொள்ளலாம்.
- கூகுள் ரீடர் குறித்த விரிவான விளக்கக் குறிப்பை ஜி-z இங்கு தருகிறார்.
- கூகுள் ரீடர் குறித்த விளக்க நிகழ்படம்
1 comment:
என் பதிவில் இருந்து அப்படியே சுட்டு நீங்கள் இங்கு இட்டிருப்பதில் எனக்கு உடன்பாடில்லை. உடனடியாக இந்த இடுகையை நீக்கக் கேட்கிறேன். வருங்காலத்திலும் என் இடுகைகளை இங்கு சுட்டுப் போடாமல் இருக்கவும். நன்றி.
Post a Comment