Friday, 15 June 2007

ஆட் சென்ஸ்

ஆட் சென்ஸ் பத்தி யாராவது தெரிஞ்சா சொல்றேளா?

ஆட் சென்ஸ் மூலமா நீறைய சம்பாதிக்கணும்னு ஆசையா இருக்கு. நிறையா எழுதுவேன். (சி)வாஜி பத்தி கூட நிறைய எழுதலாம். பெரிய நடிகராச்சே அவரு. ஆனா பாருங்க, அரசியல் அவருக்கு ஒத்துவரல.

பரதநாட்டியம் பற்றி கூட எழுதுவேன். பொறுத்திருங்கள்.

அட்சென்ஸ் பத்தி செய்தி:

காலையில் ஒரு தமிழ் வலைத்தளத்தை மேய்ந்தபோது கூகுள் ஆட்சென்ஸில் தமிழ் விளம்பரம் கண்ணில் பட்டது. ஆங்கிலத்தை தவிர்த்த மற்ற பிராந்திய மொழிகளிலும் கூகுள் ஆட்சென்ஸை விரிவுபடுத்த கூகுள் நிறுவனம் முயற்சி எடுத்து வருகிறது. ஏற்கனவே ஹிந்தி மொழி சார்ந்த விளம்பரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. தமிழில் சோதனை முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். தமிழில் விளம்பரங்கள் குறித்த அறிவிப்புக்களை இதுவரை நான் பார்க்கவில்லை.

தமிழில் கூகுள் ஆட்சென்ஸ் அறிமுகப்படுத்தப்படுவது வலைத்தளங்களும் வலைப்பக்கங்களும் மேம்பட பெரிதும் உதவும். தமிழில் இணையத்தளங்களின் மூலமும் வலைப்பதிவுகளின் மூலமும் வருவாய் ஈட்ட இதுவரை வழி இல்லாமல் இருந்து வந்தது. கூகுள் ஆட்சென்ஸ் முறை தமிழில் அறிமுகப்படுத்தும்போது தமிழ் தளங்களுக்கும் வருவாய் ஈட்ட வழிபிறக்கும். ஆனால் தமிழ்/தமிழர்கள் சார்ந்த வணிக நிறுவனங்களில் பல இன்னும் இணையதள ஜெனரேஷனுக்கு மாறாததால் உடனடியாக ஆயிரக்கணக்கான டாலர்களை எதிர்பார்க்க முடியாது.

வலைப்பதிவு

இன்னிக்கு தான் வலைப்பதிவு செய்ய கத்திண்டு இருக்கேன். கவிதையெல்லாம் கூட எழுதுவேன். ஜமாய்க்கிறேன் பாருங்க.

தமிழ்நாட்டுத் திருக்கோயில்கள் எல்லாம் பராமரிக்க முடியாமல், பாழடைஞ்சி போயிக்கிடக்கு. ஒவ்வொரு கோயிலுக்கும் போயி அவற்றின் ஷரித்திரங்களை எல்லாம் எழுதணும்.

Google reader, நான் படிக்கும் தமிழ் வலைப்பதிவுகள்

அவ்வப்போது சில நல்ல தமிழ் வலைப்பதிவுகளை கவனிக்கும்போது அவற்றை என் கூகுள் ரீடரில் சேர்த்து வைத்துக் கொள்கிறேன். இதனால், விருப்பமான வலைப்பதிவுகளை எவ்வளவு நாள் சென்றாலும் தவற விடாமல் படிக்கலாம். ஒவ்வொரு தளமாகச் சென்று பார்க்காமல் அனைத்தையும் ஒரே இடத்தில் இருந்து இலகுவாகவும் வேகமாகவும் படிக்கலாம்.

இப்படி சேர்த்து வைத்திருக்கும் பதிவுகள் எண்ணிக்கை 150ஐத் தாண்டுகிறது. யாருக்காவது இந்தப் பட்டியலைப் பெற்றுக் கொள்ள விருப்பமானால் ravidreams_03 at yahoo dot com க்கு எழுதுங்கள். இந்தப் பட்டியல் அடங்கிய OPML கோப்பை உங்களுடன் பகிர்ந்து கொள்ள மகிழ்வேன். இப்பட்டியலை உங்கள் ரீடரில் சேர்த்துக் கொண்ட பிறகு, உங்களுக்கு விருப்பம் இல்லாத பதிவுகளை இலகுவாக நீக்கிக் கொள்ளலாம். மேலும், நீங்கள் விரும்பும் பதிவுகளையும் சேர்த்துக் கொள்ளலாம்.

- கூகுள் ரீடர் குறித்த விரிவான விளக்கக் குறிப்பை ஜி-z இங்கு தருகிறார்.

- கூகுள் ரீடர் குறித்த விளக்க நிகழ்படம்

வாஜி

எல்லாரும் போராங்கண்ணு நானும் போய்த்தொலைச்சேன். $50 டிக்கெட்டுங்க. தியேட்டர்ல ஒரே கூட்டம். விசில் சத்தம். படத்தை யாரும் பாக்கிறது மாதிரி இல்லை.
என்னோட பொல்லாத நேரம். ஒரே தலைவலி. இங்க வந்து பாருங்க. நான் படம் நல்லா இல்லைன்னு சொன்னேன்னா? நான் சொல்ல வந்தது என்னன்னா...

வாஜி பற்றி செய்திகள்:
ரஜினியின் சிவாஜி ஆடியோ உலகில் ஒரு சபாப்தத்தைப் படைத்திருக்கிறது. ஒரே நாளில் அனுப்பிய அனைத்து ஆடியோக்களும் விற்பனையாகித் தீர்ந்து விட ஏ.வி.எம் குஷியாகி இருக்கிறது.

சென்னை ரிச்சி தெருவில் ஆடியோ சிடிக்களை வாங்க காலை ஐந்து மணிக்கே கூட்டம் முண்டியடிக்க ஆரம்பித்திருக்கிறது. ஏற்கனவே இணையத்திலும், திருட்டு ஆடியோவிலும் எல்லா பாடல்களும் வெளியானபின்பும் சிவாஜிக்கு இப்படி ஒரு மவுசு இருக்கிறது என்றால் அதற்கு ஒரே காரணம் ரஜினி தான்.

ஏ.வி.எம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெளியான சில மணி நேரங்களிலேயே இரண்டு இலட்சம் சி.டிக்கள் விற்பனையானதாகத் தெரிவிக்கிறது. ஏற்கனவே ரிங்டோ னின் மூலம் நல்ல லாபம் சம்பாதித்த தயாரிப்பாளர்கள் இப்போது ரிங்டோ னுடன் சிவாஜியின் ‘பஞ்ச்’ டயலாக் களையும் விற்பனை செய்ய இருக்கிறார்கள்.

ஏற்கனவே முதல் வாரத்துக்கான காட்சிக்குரிய டிக்கெட் கூப்பன்கள் எல்லாம் விற்றுத் தீர்ந்திருக்கின்றன.

இப்படி கோடிகளைக் குவிக்கும் இந்தப் படத்தின் மூலம் ரஜினிக்குக் கிடைக்கப்போகும் பணம் இருபத்து ஐந்து கோடியாம். இந்தியாவிலேயே மன்னிக்கவும் ஆசியாவிலேயே அதிகம் சம்பாதிக்கும் நடிகர் என்னும் பெயர் இதன் மூலம் ரஜினிகாந்திற்குக் கிடைத்திருக்கிறது.

சிவாஜி படத்திலேயே சிவாஜிகணேசன் போல தோன்றுகிறாராம் ரஜினி ! எம்.ஜி.ஆர் போல போலவும் ஒரு காட்சிக்கு வருகிறாராம். தெலுங்கு பதிப்பில் என்.டி.ராமராவ், சிரஞ்சீவி கெட்டப்களில் கலக்குகிறாராம் !

இதற்கிடையில் சூதாட்டத்திலும் ரசிகர்கள் ஈடுபடுகிறார்களாம். என்ன சூதாட்டம் என்கிறீர்களா ? ரஜினி படம் மே மாதம் எட்டாம் தியதியா, பதினான்காம் தியதியா, பதினேழாம் தியதியா என்று சூதாட்டமாம்

சர்வம் சிவாஜி மயம் !

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது